செல்லத்தம்பி கிருபா உதவும் கரங்கள் உதவி மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பினார்
காலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்காக உதவிசெய்தமை நீங்கள் அறிந்ததே.அதேவேளை செல்லத்தம்பி கிருபா அவர்களை நேரடியாக சந்தித்தபோது காலையடி இணையத்தினூடாக எனது சத்திரசிகிச்சைக்காக உதவிசெய்தமைக்கு எனது நன்றியை மனமாறச்சொல்லிக்கொள்கிறேன்.
நான் கவலைக்கிடமாக இருந்தபோது காலையடி இணையத்தின் உதவுங்கரங்கள் பற்றிக்கேள்விப்பட்டு அவர்களிடம் உதவிநாடினேன்.
அவர்களும் எனது நிலையை அறிந்து கொண்டுதேவையான பணத்தை உடனடியாக தந்துஉதவினார்கள்.
இவர்களின் இந்தச்சேவையால் நான் இன்று இந்த நிலையில் இருக்கின்றேன் என்பதில் மிகவும் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இவர்களின் சேவை தொடரவேண்டும் எனவும் கூறிக்கொள்கின்றேன்.























































